Tuesday, August 28, 2007

நினைவுக்காக 3

கடந்த வாரங்களில் பார்த்த படங்கள்:

1. The Untouchables
2. Wild Strawberries
3. City of Women
4. A Woman is a Woman
5. Get rich or die tryin
6. Piranha
7. Saw
8. For a few dollars more

Tuesday, August 7, 2007

அதிர்ச்சியளிக்கும் புகைப்படம் - 2

நினைவுக்காக 2

கடந்த வாரத்தில் பார்த்த படங்கள்:

1. Breaking and Entering
2. Be with me
3. 12வது முறையாக Cinema Paradiso
4. Die hard 4

Monday, July 23, 2007

அதிர்ச்சியளிக்கும் புகைப்படம்


நினைவுக்காக

கடந்த 2 வாரமாக நான் பார்த்த படங்கள்:
1. Masculin Feminin
2. Paradise Now
3. Seabiscuit

பார்த்து கொண்டிருக்கும் படம்:
1. The Vertical Ray of the Sun

Friday, July 6, 2007

குறிப்பு

கடந்த 2 வாரமாக நான் பார்த்த படங்கள்:
1. Once upon a time in West
2. Baise-Moi
3. Serpico
4. The Scent of a Woman
5. Ages of Lulu

பார்த்து கொண்டிருக்கும் படங்கள்:
1. Days of being wild
2. The Last tango in Paris

Friday, June 15, 2007

Traffic - என் பார்வையில்

இப்படம் போதை பொருட்களை உபயோகபடுத்துபவர்கள், உற்பத்தி செய்பவர்கள், விநியோகம் செய்பவர்கள், விற்பனை செய்பவர்கள், இவர்கள் அனைவரையும் கட்டுபடுத்துபவர்கள் , தடுப்பவர்கள் ஆகியோர்களை பற்றியதும், அதில் இருக்கின்ற அரசியலையும், அது சமுதாயதிற்கு ஏற்படுத்தும் விளைவுகளையும், தனி மனிதர்கள் அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை பற்றியதாகும் .

இப்படம் நான்கு உபகதைகளாக நகர்த்தபடுகிறது. இந்த உபகதைகளில் வரும் கதாபாத்திரங்கள் நேரடியாக சம்பந்தபடாவிடினும் இவர்களின் ஒவ்வொரு செய்கைகளின் விளைவுகளால் ஏற்படுகிண்ற பாதிப்புகளே இக்கதையாகும்.

Robert Wakefield நீதிபதியாக இருப்பவர். வெள்ளை மாளிகையில் இருந்து விடுக்கபட்ட அழைபால் National drug Control Policyயின் புதிய தலைவராக ஆகின்றார். இவர் இப்பதவியில் இருந்துகொன்டு போதை பொருட்களுக்கு எதிரான போரை நடத்தி செல்கிறார். அப்படியான போரில் அவர் அதிர்கொள்ளும் தடைகள் ஒரு உபகதை. அவர் எதிர்கொள்ளும் முக்கியமான இரண்டு தடைகளில், ஒண்று அரசியல்வாதிகளும் பெரும் பணக்காரர்களும் இணைந்த கூட்டு, மற்றொன்று குடும்பத்தில் அவர் 16வயது பெண்ணும் மனைவியும்.

Caroline Wakefield:What's Washington like?
Robert Wakefield: It's like, uh--It's like Calcutta;surrounded by beggars.Only these beggars are wearing $1500 suits and they don't say "please" and "thank you".

Robert Wakefield: If there is a war on drugs, then many of our family members are the enemy. And I don't know how you wage war on your own family.

Mexicoவில் இருக்கும் காவல் துறை அதிகாரிகளான Javier Rodriguez , Manolo Sanchez பற்றியது இன்னொரு உபகதை. எப்படி அவர்கள் போதை பொருள் Americaவிற்கு கடத்தபடுவதை தடுக்கிறார்கள், மேலதிகாரிகளால் எப்படி ஏமாற்றபடுகிறார்கள் என்பதாக இக்கதை செல்லும்.

DEA Agent: Javier, you should feel good about this.
Javier : I feel like a traitor .

Americaவில் போதை பொருள் தடுப்பு பிரிவில் உள்ள காவல் துறை அதிகாரிகளான Montel Gordon , Ray Castro பற்றியது இன்னொரு உபகதை. இவர்கள் எப்படி போதை பொருள் விநியோகம் செய்யும் பெரும் பணக்காரர்கள் மற்றும் அதை தயாரிக்கும் பெரும் குழுக்கள் ஆகியவைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதாக இக்கதை செல்லும்.

Gordon: The first time i got laid was on a beach like that.
Ray: You got what on a beach?
Gordon :Got laid , man. Lost my virginity , was a sophomore in high school.
Ray: that's cool.
Gordon : yeah, it was sweet.
Ray: did he treat you good.

Mexicoவில் போதை பொருள் உற்பத்தி செய்யும் பெரும் இரண்டு குழுக்களில் ஒன்றான Tijuana Cartel தயாரிக்கும் போதை பொருட்களுக்கு Americaவில் மொத்த விநியோகம் செய்யும் ஒரு பெரும் பணக்காரரின் மனைவியை(Helen Ayala) பற்றியது இன்னொரு கதை. அவள் கணவன் கைதான பின் அவள் எதிர்கொள்ளும் சம்பவங்கள் பற்றியதாக இக்கதை செல்லும்.

Helena : When are you gonna do it?
Francis : I don't know ,Eduardo Ruiz is the only real witness against Carl, Security will be very tight .I will not be able to get to him.
Helena : You will be able to get to him.If they can get to the pope and the president , you can certainly get to him.

இதில் ஒவ்வொரு கதைக்கும் ஒரு நிறம் அளித்திருப்பார் இயக்குனர். போதை பொருள் பற்றிய அனைத்தையும் தெரிந்து கொள்ள இப்படம் மிகவும் உதவும். இப்படத்தில் நீதி போதனைகள் எதுவும் கிடையாது. அது அது அதனதன் இயல்புகளிலேயே நகர்த்தியிருப்பது படத்தின் சிறப்பு. படம் வேகமாக சென்றாலும், நிறைய உப கதைகள் ,கதாபாத்திரங்கள், நிறைய தகவல்கள் இருந்தாலும் இவை அனைத்தையும் மிக எளிதாக புரிந்து கொள்ளும் விதத்தில் படத்தை எடுத்துள்ளார்கள்.

Erika Christensen , Benicio Del Toro , Don Cheadle , Luis Guzmán ஆகியோரின் நடிப்பு மனதில் நிற்பவை. திரைக்கதையும், Editingம், Cinematographyயும் மிக அருமையகவும் , புதுமையாகவும் செய்திருக்கிறார்கள்

மிக சிறப்பான அருமையான படம்

Full Cast & Crew: http://www.imdb.com/title/tt0181865/fullcredits#cast
விருதுகள்: http://www.imdb.com/title/tt0181865/awards